Vaani Jayaram : வாணி ஜெயராம் மரணம்.. பிரேத பரிசோதனையில் தெரியவந்த காரணம்?..
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமன் மறைவு குறித்தான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
தமிழில் 1973 ஆம் ஆண்டு வெளியான "தாயும் சேயும்" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் வாணி ஜெயராம்.
மொத்தம் 19 மொழிகளில் சுமார் 10,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள வாணி ஜெயராம், தமிழில் மட்டும் சுமார் 1500 பாடல்கள் வரை பாடி உள்ளார். மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம் உள்ளிட்ட பாடல்களை கேட்கும் போது பலரும் வாணி ஜெயராம் குரலில் சொக்கி போய் விடுவார்கள்.
Images are subject to © copyright to their respective owners.
தனது மிகவும் இனிமையான குரல்கள் மூலம் பல பாடல்களை பாடி ஏரளாமான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தவர் வாணி ஜெயராம்.
சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் மூன்று முறை வென்றிருந்தார் வாணி ஜெயராம். வாணி ஜெயராமுக்கு கடந்த குடியரசு தின விழாவின் போது பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தமது 78 ஆவது வயதில் வாணி ஜெயராம் நேற்று காலமானார். இந்நிலையில் அவரது மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அறிக்கையில், "பாடகி வாணி ஜெயராம் கீழே விழுந்த போது தலையில் அடிபட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. படுக்கை அருகில் இருந்த 2 அடி உயர பழமையான மேசை மீது வாணி ஜெயராம் விழுந்ததில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. நெற்றியில் காயம், மேசையின் விளிம்பில் ரத்த கறைகள் இருந்ததாக தடயவியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
VAANI JAYARAM : வாணி ஜெயராம் மரணம்.. பிரேத பரிசோதனையில் தெரியவந்த காரணம்?.. வீடியோ