www.garudabazaar.com

Divya Sridhar : நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு.. நெகிழவைத்த ‘செவ்வந்தி’ சீரியல் டீம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய காலகட்டத்தில், சீரியல் மூலம் மக்கள் மத்தியில் ஏராளமான நடிகர், நடிகைகள் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில், "கேளடி கண்மணி" என்னும் தொடர் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் அறிமுகம் ஆனவர் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

sevvanthi serial team surprise baby shower to divya sridhar

Also Read | Roja serial : "இது முடிவல்ல..".. கடைசி நாள் படப்பிடிப்பு.. ரோஜா சீரியலின் ஹீரோ & ஹீரோயின் உருக்கம்.!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இதற்கு அடுத்தபடியாக, திவ்யா ஸ்ரீதர் நடித்து வந்த "மகராசி" தொடர், ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலம் ஆக்கி இருந்தது.

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனான SSR ஆர்யன் நாயகனாக நடிக்கும் இந்த தொடர் சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் நாயகியாக நடித்துவந்த திவ்யா ஸ்ரீதர் பின்னர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "செவ்வந்தி" எனும் தொடரிலும் முதன்மை கதாபாத்திரத்தில் திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். நடிகர் மற்றும் டான்ஸரான ராகவ், இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

குறுகிய காலத்திலேயே "செவ்வந்தி" சீரியல், பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து பிரபல சீரியல் நடிகரும், "கேளடி கண்மணி" தொடரில் தன்னுடன் இணைந்து நடித்திருந்தவருமான அர்ணவை திவ்யா ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை திவ்யா ஸ்ரீதர், “விரைவில் எங்கள் குழந்தையை நாங்கள் எதிர்பார்க்க உள்ளோம். காதலர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக அன்புடன் இதனை பேணுவோம். எனக்கும், என் குடும்பத்திற்கும் நீங்கள் கொடுத்த அளவில்லாத அன்பிற்கும், ஆதரவிற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

sevvanthi serial team surprise baby shower to divya sridhar

ஆனால் அதன் பின்னரே அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர் இருவருக்குமான பிரச்சனைகள் பூதாகரமாகின. இதில் தன் கணவர் தன்னை ஏற்காதது குறித்தும், தம் மீது வன்முறை நிகழ்த்தியதாகவும் வீடியோக்களை வெளியிட்ட நடிகை  திவ்யா ஸ்ரீதரின் குற்றச்சாட்டுகளை ஏற்ற போலீஸார், அதனை அடுத்து நடிகர் அர்ணவை விசாரித்தனர். இதன் காரணமாக நடிகர் அர்ணவ் கைதாகி பின்னர் ஜாமினிலும் வெளியானார். இந்நிலையில்தான், தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதரின் வீட்டுக்கு சர்ப்ரைஸாக சென்ற சன் டிவி செவ்வந்தி சீரியல் குழுவினர், அவருக்கு அவரது இல்லத்திலேயே வைத்து வளைகாப்பும் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தமது இன்ஸ்டகிராமில் நடிகை திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.

 

Also Read | Baba : ‘உப்பிட்ட தமிழ் மண்ணை’ பாடல்.. ‘ரஜினியும் தமிழும்’ வரிகள் குறித்து சுரேஷ் கிருஷ்ணா.!

தொடர்புடைய இணைப்புகள்

sevvanthi serial team surprise baby shower to divya sridhar

People looking for online information on Arnav divya shridhar, Divya Shridhar, Divya shridhar arnav, Sevvanthi serial, Sun TV, Tv Serial will find this news story useful.