இந்த வயதில் கண்ணதாசன் பாடலா..? புத்தி உள்ள மனிதன் பாடலை கச்சிதமாக பாடும் பள்ளி சிறுவன்.
முகப்பு > சினிமா செய்திகள்கண்ணதாசனின் புத்தி உள்ள மனிதனெல்லாம் பாடலை, அச்சு பிசகாமல் அப்படியே பாடும் பள்ளி சிறுவனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லெஜன்ட்ரி பாடலாசிரியராக அறியப்படுபவர் கண்ணதாசன். இவரது பாடல்கள் யாவும் காலம் கடந்து இன்றும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இவரது தத்துவ பாடல்களை பலரும் கேட்டு ரசித்து கொண்டு இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் கண்ணதாசன் - சந்திரபாபு கூட்டணியில் வந்த பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நான் ஒரு முட்டாளுங்க, புத்தி உள்ள மனிதனெல்லாம் உள்ளிட்ட பாடல்களில் அதில் குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில் கண்ணதாசன் - சந்திரபாபுவின் பாடலை பத்து வயதே இருக்கும் பள்ளி சிறுவன் பாடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அன்னை படத்தில் இடம்பெற்ற புத்தி உள்ள மனிதன் எல்லாம் பாடல் முழுவதையும், ஒரு வரி கூட மறக்காமல், கச்சிதமாக பாடும் சிறுவனின் வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. மாடர்ன் இசைகளை கேட்டு வரும் இந்த கால தலைமுறையின் நடுவே, கண்ணதாசன் பாடலை அப்படியே பாடும் சிறுவனுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர்.
Which school is this? pic.twitter.com/xti1d0zwxW
— Sriram (@SriramMadras) February 26, 2020