''உங்களுக்கு வைரஸ் இருக்குமோ ?'' - ரசிகரின் கேள்விக்கு பதறிய பிரபல நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகத்தின் நேற்று ஒருநாள் மட்டும் கொரோனாவால் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Sathish's answer on his latest pic regarding Coronavirus is going viral | கொரோனா வைரஸ் குறித்து ரசிகரின் கேள்விக்கு சதிஷ் பதில்

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மக்களை வீட்டிலேயே இருங்கள் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மளிகைக் கடைகள், காய்கறி  கடைகள் உள்ளிட்டவற்றிற்கு புதிய நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அவசியமில்லாமல் வெளியில் வருவது தவிர்க்கப்படும்.

திரையுலக பிரபலங்களும் அவ்வப்போது கொரோனா குறித்து பதிவுகள் எழுதி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்த்தில் மலேசியா நாட்டில் உள்ள பெட்ரோனஸ் (Petronas) ட்வின் டவர் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர், 'அப்போ உங்களுக்கு வைரஸ் இருக்குமோ ?' என்று கேட்க, அதற்கு  பதிலளித்த சதீஷ், ''யப்பா 3 வருஷத்துக்கு முன்னாடி எடுத்து  ஃபோட்டோ இது'' என்று பதிலளித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

🥴🤔

A post shared by Sathish (@actorsathish) on

Entertainment sub editor