சூப்பர் அப்டேட் : இந்த இயக்குநருடன் இணையும் சசிக்குமார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் ரஜினிகாந்துடன் 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'நாடோடிகள் 2' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

Sasikumar's new movie with Director Nirmalkumar shoots starts from tomorrow

அதனைத் தொடர்ந்து 'சலீம்' பட இயக்குநர் நிர்மல் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பூஜையுடன் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் சசிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து நடிக்கும் 'கென்னடி கிளப்' படத்தின் பணிகளும் விருவிருப்பாக நடைபெற்றுவருகிறது.