Nenjuku Needhi

கார்த்தி படத்துக்கு G.V. பிரகாஷ் போட்ட மியூசிக்.. உரிமத்தை கைப்பற்றிய உலகின் முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்.

Sardar movie music rights bagged by Sony music

Also Read | கார்த்தி நடிக்கும் மாஸான புதிய படம்.. சேட்டிலைட் TV உரிமையை கைப்பற்றிய முன்னணி சேனல்!

அண்மையில் இவர் இசையமைத்த சூரரைப்போற்று, அசுரன் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தற்போது கார்த்தி நடிப்பில் சர்தார் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இசை உரிமத்தை உலகின் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை இரண்டாவது லுக் போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Sardar movie music rights bagged by Sony music

நடிகர் கார்த்தியின் 22வது படம் சர்தார் ஆகும். இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

Sardar movie music rights bagged by Sony music

மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Sardar movie music rights bagged by Sony music

ஜி.வி. பிரகாஷ், ஏற்கனவே கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், சகுனி, கொம்பன் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Also Read | கார்த்தி நடிக்கும் 'சர்தார்' படத்தின் டிஜிட்டல் உரிமம்.. கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Sardar movie music rights bagged by Sony music

People looking for online information on Karthi, Sardar movie, Sardar movie music rights, Sardar Movie Release Updates, Sony Music will find this news story useful.