Nenjuku Needhi

தனுஷ் நடிக்கும் வாத்தி.. படப்பிடிப்பில் இணைந்த பிரபல முன்னணி நடிகை! அசத்தலான வைரல் BTS போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

Dhanush Starring Vaathi Movie Shooting Update from Actress Samyuktha Menon

Also Read | கேன்ஸ் பட விழாவில் மாஸ் என்ட்ரி..இந்தியா சார்பாக கலக்கிய பூஜா ஹெக்டே! செம HOT போட்டோஸ்

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு வாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாவதை போஸ்டர் மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 அன்று தொடங்கியது. இதற்கான ஆரம்ப பட பூஜை ஜனவரியில் நடந்தது. இதில் தனுஷ், இயக்குனர் வெங்கி, சம்யுக்தா மேனன் கலந்து கொண்டனர்.

Dhanush Starring Vaathi Movie Shooting Update from Actress Samyuktha Menon

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை சம்யுக்தா மேனன் BTS போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் படப்பிடிப்பில் நடிகை சம்யுக்தா கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

Dhanush Starring Vaathi Movie Shooting Update from Actress Samyuktha Menon

கடந்த வருடத்தில் வெற்றிமாறன் இயக்கத்திலான அசுரன் திரைப்படம் மூலம் சிறந்த நடிகருக்கான இந்திய அரசின் தேசிய விருதினை நடிகர் தனுஷ் பெற்றிருக்கிறார். தமிழைத் தொடர்ந்து இந்தி, பிரஞ்சு, ஹாலிவுட் என பல மொழி, நாட்டு திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகர் தனுஷ் தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Dhanush Starring Vaathi Movie Shooting Update from Actress Samyuktha Menon

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Starring Vaathi Movie Shooting Update from Actress Samyuktha Menon

People looking for online information on Dhanush, Samyuktha Menon, Vaathi Movie, Vaathi Movie Shooting Update will find this news story useful.