“இன்னொரு ஜென்மம் இருந்தா இந்த வேலை தான் பார்க்கணும்”- நடிகை வரலக்ஷ்மி பெருமிதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது அடுத்த ஜென்மத்தில் தான் செய்ய விரும்பும் வேலை குறித்து சுவாரஸ்யமான ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Varalaxmi Sarathkumar tweeted taht she wants to be an IPS Officer in her next life

விஜய் நடித்த ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, தனுஷின் ‘மாரி 2’ உள்ளிட்ட திரைபப்டங்களில் வலுவான வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வரலக்ஷ்மி. கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் போன்ற கொள்கைகள் ஏதுமின்றி, தனக்கு சவாலாக தோன்றும் அத்தனை கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தற்போது ஜே.கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜ பார்வை’ திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக வரலக்ஷ்மி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனது தொழிலை மிகவும் நேசிக்கும் நடிகை வரலக்ஷ்மி, ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் கம்பீரமான ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் இருப்பது போன்ற சில நொடி வீடியோ காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான அவரது ட்வீட்டில், அடுத்த ஜென்மத்தில் போலீஸ் வேலை தான் பார்க்க விரும்புகிறேன். என் வேலையை நான் நேசிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் அளிக்கும் எனது இயக்குநர்களுக்கு நன்றி. நான் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும் அதனை அன்போடு ஏற்றுக் கொள்ளும் ரசிகர்களுக்கு நன்றி. அது தான் எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது’ என ட்வீட் செய்துள்ளார்.

பொதுவாகவே வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலக்ஷ்மி இம்முறை சவாலான, கம்பீரமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய் சமரத் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்க, மேத்தீவ்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.