www.garudabazaar.com

'மகாமுனி' சாந்த குமாரின் அடுத்த படம்.. ஹீரோ - ஹீரோயின் இவங்களா? செம COMBO-வா இருக்கே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Santhakumar to direct Arjundas and Tanya Ravichandran

அருள்நிதி நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த மௌன குரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சாந்த குமார்.

இப்படத்தில் அருள்நிதி மற்றும் இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர், ஜான் விஜய், மதுசூதன் ராவ், உமா ரியாஸ் கான், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படத்திற்கு  இசையமைத்துள்ளார் எஸ்.தமன் இசையமைத்தார்.

சாந்த குமார் தனது இரண்டாவது படமாக ஆர்யா நடித்த மகாமுனி படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் மஹிமா நம்பியார் கதாநாயகிகளாக நடித்தனர். காளி வெங்கட், ரோகினி, ஜெயபிரகாஷ், இளவரசு, அருள்தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இந்த படத்திற்கும் எஸ்.தமன் இசையமைத்தார்.

Santhakumar to direct Arjundas and Tanya Ravichandran

இந்நிலையில் இயக்குனர் சாந்த குமார், தனது மூன்றாவது படமாக நடிகர் அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Santhakumar to direct Arjundas and Tanya Ravichandran

People looking for online information on MahaMuni, Mouna Guru, Santhakumar will find this news story useful.