டிவி டாஸ்கில் எழுந்த சண்டை.! சைலண்ட் என ‘ஆக்ரோஷமாக’ கத்திய போட்டியாளர்! அரண்ட ஹவுஸ்மேட்ஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் வீட்டில், சக போட்டியாளர்களின் உண்மை முகத்தை அம்பலப் படுத்தவேண்டும் என நினைக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக செய்தி டிவி விவாத நிகழ்ச்சி டாஸ்க் அரங்கேறி உள்ளது.

இதற்கென பிக்பாஸில் ரெட் டிவி மற்றும் ப்ளூ டிவி என 2 அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ரெட் டிவியில் அபிஷேக், சிபி மற்றும் ரிப்போர்ட்டராக பிரியங்கா இருக்கின்றனர். இதேபோல் ப்ளூ டிவிடில் ராஜூ, இமான் மற்றும் ரிப்போர்ட்டராக அக்ஷரா இருக்கின்றனர்.
இந்நிலையில் வருண் மற்றும் தாமரையை நேர்காணல் செய்யும்பொழுது பிரியங்கா, தாமரையிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, சிபி, “தாமரை வேண்டுமானால் நோ கமெண்ட்ஸ் என்கிற பதிலையும் சொல்லலாம்” என சலுகை வழங்குகிறார். இதனை அடுத்து சிபியிடம் அபிஷேக் மற்றும் பிரியங்கா கேள்வி மேல் கேட்டனர். இதனால் கோபப்பட்டு கேள்வித்தாளை கிழித்து வீசிவிட்டு சிபி நகர்ந்துவிட்டார்.
குறிப்பாக ஸ்கிரிப்டில் இருப்பதைதானே பேச சொல்கிறோம்? எழுதப்பட்ட கேள்விகளை கேட்பதில் என்ன? என்று அபிஷேக்கும், பிரியங்காவும் சிபியிடம் கேட்டனர். இதில் வருணும் பிரியங்காவிடம் வாதம் செய்கிறார். அதாவது சிபிக்கு இதில் உடன்பாடில்லை எனும் போது ஏன் வற்புறுத்துகிறீர்கள் என வாதம் செய்கிறார்.
இந்த சலசலப்பு பிக்பாஸ் வீட்டுக்குள் அரங்கேறத் தொடங்கியது. அப்போது சைலண்ட்ஸ் என்று ஆவேசமாக சஞ்சீவ் கத்தியுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் இந்த பிக்பாஸ் செய்தி டிவி நிகழ்ச்சி டாஸ்க்கை கவனித்து இதில் இடம் பெறும் ரெட் டிவி மற்றும் ப்ளூ டிவி அணிகளின் டி.ஆர்.பி ரேட்டிங்கை சஞ்சீவ் இறுதியில் நிர்மானிக்க வேண்டும்.
பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்தவர் சஞ்சீவ். நடிகர் விஜய்ய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.