www.garudabazaar.com

நீ படிச்ச 'ஸ்கூல்ல' நான் ஹெட்மாஸ்டர்... பாலாஜிக்கு 'தெறி' பதிலடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபாவளிக்கு முன்னரே பிக்பாஸ் வீட்டில் வெடிகள் படார் படாரென வெடிக்க ஆரம்பித்து விட்டது. பாலாஜி சொன்னதை போட்டியாளர்கள் மத்தியில் போட்டு கொடுத்தது, அனிதாவுக்கு தேவையான ஒரு அட்வைஸ், ரம்யாவின் தவறை எடுத்து சொன்னது என கமல் இன்று சுவாரஸ்யமாக நிகழ்ச்சியை கொண்டு சென்றார். வேல்முருகன் வெளியேற்றம் முன்பே தெரிந்து இருந்தாலும் கூட இன்றைய நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை.

Sanam Shetty given Honest reply for Balaji, twitter Reacts

கமல் முன்னிலையில் கேப்டன் பதவியை விட்டு கொடுத்ததற்கான காரணம் குறித்து பாலாஜி தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றார். கடைசியில் ஓபனாகவே அர்ச்சனா, ரியோ, சோம், நிஷா, வேல்முருகன் குரூப்பாக இருக்கிறார்கள், இன்ஃபுளுயன்ஸ் செய்கிறார்கள் என சொல்லி விட்டார். இதை அர்ச்சனா மற்றும் ரியோ இருவரும் மறுத்தனர். ஆனால் அடுத்து எழுந்த சனம் பாலாஜியை போற போக்கில் செஞ்சு விட்டு போய்விட்டார். சனம் பேசுகையில் இந்த வீட்டில் இரண்டு குரூப் இருக்கு.

நான் எந்த குரூப்பிலும் இல்ல(என்ன ஒரு வில்லத்தனம்) பாலாஜியும் குரூப்பாக தான் இருக்கிறார், அவரும் இன்புளுயன்சராக இருக்கிறார் என போட்டு உடைத்து விட்டார். பட்பட்டென பதில் சொல்லும் பாலாஜியே ஷாக்காகி விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் செம பதிலடி சனம் என அவரை பாராட்டி ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். சனம் ஒரு வலிமையான போட்டியாளராக உருவெடுக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நாம் முன்பே சொல்லி இருந்தோம். அதேபோல அவர் படிப்படியாக ஸ்கோர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Sanam Shetty given Honest reply for Balaji, twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.