www.garudabazaar.com

எனக்கு உங்கள 'ரொம்ப' புடிக்கும்... நீங்க அழுதது 'கஷ்டமா' இருந்தது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மீண்டும் ஒரு வைல்ட் கார்டு எண்ட்ரி. ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய போட்டியாளராக நுழைந்து இருக்கிறார். இதனால் வேல்முருகன் வீட்டைவிட்டு வெளியேறினாலும் போட்டியாளர்கள் மொத்த எண்ணிக்கை 16 என்பதாகவே உள்ளது.(பிக்பாஸ்க்கு ரொம்ப புடிச்ச நம்பர் போல) ரசிகர்கள் எதிர்பார்ப்பை சுசித்ரா வீணாக்கவில்லை.

Suchitra Talked about her favorite contestant in Bigg Boss House

போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் எமோஜி கொடுத்த சுச்சி அதற்கான காரணங்களை மிக தெளிவாகவும், அழகாகவும் எடுத்து உரைத்தார். நீங்க மறுபடியும் தீயா விளையாடணும் என சுரேஷ்க்கும், கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும் என்பது போன்ற எமோஜியை அர்ச்சனாவுக்கும் கொடுத்தார். சனமிற்கு எமோஜி கொடுத்து பாலாவுக்கும் உங்க மேல பாசம் இருக்கு என ஜாலியாக அவர் கொளுத்தி போட்டதும் நன்றாக இருந்தது.

அதேபோல எனக்கு மிகவும் பிடித்த போட்டியாளர். அவர் அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை என்று உருக்கமாக பேசிய சுச்சி, அந்த போட்டியாளர் அனிதா தான் என்பதை அனைவருக்கும் தெரிவித்தார். அடுத்தடுத்து கமல், சுசித்ரா பாராட்டுக்களால் உற்சாகம் அடைந்துள்ள அனிதா வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டின் சவாலான போட்டியாளராக உருவெடுப்பாரா? பார்க்கலாம்!

தொடர்புடைய இணைப்புகள்

Suchitra Talked about her favorite contestant in Bigg Boss House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.