மகளிர் தினத்தில் செம கிஃப்ட் - சில்லுக்கருப்பட்டி இயக்குநரை நெகிழ வைத்த ரசிகரின் பரிசு.
முகப்பு > சினிமா செய்திகள்சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பூவரசம் பீப்பி படத்தை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சில்லுகருப்பட்டி. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். நான்கு கதைகளை கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் ஹலிதா ஷமீம் தனக்கு கிடைத்த பரிசு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'பாஸ்கர் என்பவரை பெங்களூர் ஃபிலிம் பெஸ்டிவலில் சந்தித்தேன், மகளிர் தினத்துக்காக எனக்கு ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என சொன்னார். என் படத்தின் உண்மையான வெற்றி என்பது, பல நல்ல மணிதர்களுடன் நான் கனக்ட் ஆக முடிவதே' என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் கொடுத்த ப்ரேஸ்லெட்டை அனிந்தபடி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
He is Bhaskar who met me at Bengaluru film festival, he wanted to give me a gift for the women’s day. How sweet of him!
The real success of my film is that it’s making me connect with a lot of amazing people around! 🥰 pic.twitter.com/aZoY5lHlSy
— Halitha (@halithashameem) March 7, 2020