சமுத்திரக்கனி நடித்துள்ள 'அடுத்த சாட்டை' படத்தின் டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 08, 2019 07:08 PM
அரசு பள்ளி மாணவர்களின் பிரச்சனைகளை பேசிய படம் 'சாட்டை'. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பள்ளி ஆசிரியராக சமுத்திரக்கனி நடித்திருந்தார்.

அன்பழகன் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதேக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் அடுத்த சாட்டை. இந்த முறை கல்லூரி மாணவர்களின் பிரச்சனைகளை பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, யுவன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அன்பழகன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை 11:11 புரொடக்சன் நாடோடிகள் ஃபிலிம்ஸ், ஸ்ரீ வாரி ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
சமுத்திரக்கனி நடித்துள்ள 'அடுத்த சாட்டை' படத்தின் டிரெய்லர் இதோ வீடியோ