'ரூ.50 லட்சம் தவிர எந்த தொடர்பும் இல்ல' - சமுத்திரக்கனி படம் குறித்து பிரபலத் தயாரிப்பாளர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 28, 2019 11:42 AM
சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' படத்தின் அடுத்த பாகமாக அடுத்த சாட்டை என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை 11:11 புரொடக்ஷன்ஸ் மற்றும் நாடோடிகள் புரொடக்ஷன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தை எம்.அன்பழகன் எழுதி, இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ராசாமதி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன், அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சமுத்திரக்கனி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், லிப்ரா புரொடக்ஷன்ஸ் திரு.ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் அடுத்த சாட்டை திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக லிப்ரா புரொடக்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் கொடுத்த 50 லட்சம் ரூபாய் தவிர எங்களுக்கும் #அடுத்தசாட்டை திரைப்படத்திற்கும் இனி வேற எந்த தொடர்பும் இல்லை, அதை அவர்கள் நியாயப்படி திருப்பி தருவார்கள் என்ற நேர்மையை லிப்ரா புரொடக்ஷன்ஸ் எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் திரு. ரவீந்திரன் சந்திரசேகரன் அவர்களுக்கும் "அடுத்த சாட்டை" திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துக் கொள் கிறோம்.. pic.twitter.com/RoKdErFmoW
— P.samuthirakani (@thondankani) August 27, 2019
நாங்கள் கொடுத்த 50லட்சம் ரூபாய் தவிர எங்களுக்கும் #அடுத்தசாட்டை திரைப்படத்திற்கும் இனி வேற எந்த தொடர்பும் இல்லை , அதை அவர்கள் நியாயப்படி திருப்பி தருவார்கள் என்ற நேர்மையை லிப்ரா புரொடக்சன்ஸ் எதிர்பார்க்கிறோம்@thondankani @prabhuthilaak @11_11cinema
— LIBRA Production (@LIBRAProduc) August 27, 2019