Fun Video: ’லிப் ஸ்டிக் போட்டு விட்றேன்’ – பிரபல ஹீரோயினுக்கு குழந்தைகள் தந்த க்யூட்டான டார்ச்சர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. பல ஆண்டுகளாக பாலிவுட் டோலிவுட் என்று வட்டமடித்துக் கொண்டிருந்த அவரை நம்ம தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தது கவுதம் மேனன். 

Sameera Reddy shares video with her cute children | பிரபல நடிகை சமீரா ரெட்டி தன் குழந்தைகளோடு வெளியிட்ட Fun வீடியோவைப் பாருங்க

’வாரணம் ஆயிர’த்தில் மேக்னா என்ற தேவதையாக நமக்கு அறிகுமகான அவர் பின் அசல், வெடி, வேட்டை என்று சில தமிழ் படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு இவர் அக்‌ஷை வர்தே என்ற தொழில் அதிபரை மணந்து செட்டில் ஆனார்.

இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர் தன் குழந்தைகளோடு நேரம் செலவிட்டு வருகிறார். ஹான்ஸ், நிரா என்று இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களோடு விளையாடும் குஷியான தருணங்களை வலைத்தளத்தில் பதிவிடுவது சமீராவின் வாடிக்கை.

அப்படி ஒரு வீடியோ தான் இப்போது இன்ஸ்டாவுக்கு வந்திருக்கிறது. பாட்டும் கூத்துமாக சாமீராவுக்கு அவர் குழந்தைகள் தரும் க்யூட்டான டார்ச்சரை கீழ்க்காணும் வீடியோவில் பாருங்கள்.

 

Entertainment sub editor