ரம்யா பாண்டியன் கொடுத்த 'ஷாக்'.. பிரபல நடிகர் என் சித்தப்பா.. முக ஜாடையும் ஒரே மாதிரி இருக்கே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்நிலையில் ஒரே ஒரு போட்டோ ஷூட்டின் மூலம் கொள்ளை ரசிகர்களின் நெஞ்சை அள்ளினார். பின்னர் விஜய் டிவி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி போட்டியாளராக மிரட்டினார்.

இந்த பிரபல ராம்கி நடிகர் ரம்யா பாண்டியனின் சித்தப்பா Ramya Pandiyan shares a photo of her uncle who is already a popular hero

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஒரு படம் உட்பட இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அதில்  இணைந்த கைகள், தேவன், திருப்பதி போன்ற பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண் பாண்டியன் தனது சித்தப்பா என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார்.ரம்யா பாண்டியனுக்கு இவ்வளவு பெரிய நடிகர் குடும்ப உறுப்பினரா என்ற செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இருவரது முக ஜாடையில் கூட சில ஒற்றுமைகள் இருக்கே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Entertainment sub editor