தியானத்தில் ஆழ்ந்திருக்கும் பிரபல நடிகை கூடவே தியானம் செய்யும் செல்ல நாய்க்குட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பிரச்சனை உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மக்கள் இன்னும் பீதியில்தான் உள்ளனர். எப்போது இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று காத்துக் கிடக்கின்றனர். பல அடிப்படை வசதிகள் கூட இன்றி பலர் அவதிப்படுகின்றனர். 

Samantha starts isha kriya meditation for 48 days

இந்நிலையில் பிரபலங்கள் மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகின்றனர். இந்தச் சூழல் விரைவில் சரியாகி, கொரோனா உலகைவிட்டு ஓடப் போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நம்பிக்கை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். திரை நட்சத்திரங்கள் தங்கள் பங்குக்கு ரசிகர்களை மகிழ்விக்க அவ்வப்போது தங்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். தங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்வதுடன், நாஸ்டால்ஜிக்காக பழைய நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளையும், வீட்டில் இருக்கும்படியும் அடிக்கடி கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் சாம் என்று செல்லமாக கோலிவுட் மற்றும் டாலிவுட்டால் அழைக்கப்படும் சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தியானம் செய்யப் போவதாகவும், 48 நாட்கள் ஈஷா கிரியா யோகம் கடைபிடிக்கப் போவதாகவும் தகவல் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாம் தியானம் செய்யும் ஃபோட்டோக்களை பதிவிட்டுள்ளார். ஒரு ஃபோட்டோவில் அவருடைய செல்ல நாய் ஹாஷ் அவருடன் அமர்ந்து அவரைப் போலவே தியானம் செய்கிறது. இந்த புகைப்படம் பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

தியானம் செய்வதால் மனம் அமைதியடைவதுடன் முகம் பொலிவாகும், அகமும் தெளிவாகும் என்று சொல்லாமல் சொல்கிறார் சாம். அவரது 48 நாட்கள் தியானம் வெற்றியடைய வாழ்த்துகிறார்கள் அவரது ரசிகர்கள்

 

Samantha starts isha kriya meditation for 48 days

People looking for online information on Hash, Isha, Meditation, Samantha ruth prabhu will find this news story useful.