நடிகை சமந்தா இப்போதெல்லாம் இவருடன்தான் அதிக நேரம் செலவழிக்கிறார்! அவருடைய விஐபி இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்ஊர் உலகமெல்லாம் கொரோனா பிரச்னையில் பாதிப்படைந்திருக்கும் நிலையில் திரைப்பட துறை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நடிகர் நடிகைகள் ஷூட்டிங் இல்லாததால் தங்களுடைய பொன்னான நேரத்தை குடும்பத்தாருடன் கழித்து வருகின்றனர். அடிக்கடி தங்கள் ரசிகர்களையும் சோஷியல் மீடியா மூலம் சந்தித்து உரையாடி மகிழ்கின்றனர்.

கோலிவுட்டில் அறிமுகமாகி டோலிவுட் மருமகளாகிவிட்ட சமந்தா, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இயங்கி வருபவர். கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.
தவிர அவருடைய மனம் கவர்ந்த செல்லப் பிராணியான ‘ஹாஷ்’ அடிக்கடி அவரது இன்ஸ்டாவில் இடம்பெறும். சமந்தாவின் பெட் ஓரத்தில் ஹாஷ் சமத்தாக படுத்துத் தூங்கும் ஒரு புகைப்படத்தை அண்மையில் அவர் வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.
தற்போது தன்னுடைய சருமத்தைப் பற்றி சமந்தா குறிப்பிட்டுகையில் ஹாஷ் பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. ஒரு டேபிளில் ஹாஷ் உட்கார்ந்திருக்க, பின்னணியில் சமந்தா - நல்ல வெளிச்சம், அழகிய சருமம், அருமையான நாய்க்குட்டி தினம்’ என்ற கேப்ஷனுடன் ஒரு ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார்.
அதற்கு நடிகை அனுபமா பரமேஸ்வரன் ‘உங்கள் சருமத்தின் பொலிவுக்குக் காரணம் உங்கள் மன அழகும்தான்’ என்று பதில் அளித்துள்ளார். நடிகர் அர்ஜுன் கபூர், ஹேண்ட்சம் டாக்’ என்று ஹாஷை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.