பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது குட்டி ரசிகரை பாதுகாக்க தவறிய பாதுகாவலரை அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப், திஷா பதானி, ஜாக்கி ஷ்ரோஃப், தபு உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜூன்.5ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ‘பாரத்’ படத்தின் ப்ரீமியர் காட்சிக்கு சல்மான் கான் உட்பட படக்குழுவினரும், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். ப்ரீமியர் காட்சி முடிந்து அங்கிருந்து புறப்பட்ட சல்மானை அவரது பாதுகாவலர்கள் ரசிகர்களின் கூட்டத்தின் நடுவே அழைத்துச் சென்றனர். பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சல்மான் கானை காண குவிந்திருந்த நிலையில், சல்மானை நோக்கி ஓடி வந்த குழந்தையை அவரது பாதுகாவலர் தள்ளினார்.
இதை பார்த்த சல்மான் ஆத்திரப்பட்டு தனது பாதுகாவலரை சல்மான் கான் கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது பணியை செய்த பாதுகாவலரை பொது இடத்தில் சல்மான் கான் அறைந்தது பற்றி சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சல்மான் கான் தனது ரசிகர்களின் பாதுகாப்பில் எப்போதும் கவனமாக இருப்பதால், கூட்டத்தில் குழந்தையிடம் கடுமையாக நடந்துக் கொண்ட பாதுகாவலரை அங்கேயே கண்டித்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Omg, @BeingSalmanKhan literally slapped a security guard for getting rough with a fan kid! #Bharat #SalmanKhan pic.twitter.com/05VFSRecmP
— 🎐 (@heartgetshurt) June 5, 2019