www.garudabazaar.com

போஸ்டர்ல சாய் பல்லவி மாதிரியே இருக்காங்களே?.. Twins-ஆ?.. பூஜா கண்ணனின் தெறி பேட்டி! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனியுடன் இணைந்து, சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடித்துள்ள திரைப்படம் 

is Pooja Kannan Sai Pallavi twins Chithirai Sevvaanam

“சித்திரைச் செவ்வானம்”.

ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நேரடியாக வெளியாகும் இப்படத்தில் பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஃபைட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். A.L அழகப்பன் மற்றும் P.மங்கையர்க்கரசி இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.  இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன் KL படத் தொகுப்பாளராகவும்,  ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும்  K.G.வெங்கடேஷ் ஆகியோரும் பணிப்புரிந்துள்ளனர்.

இப்படம் குறித்து ஏற்கனவே பிரபல இயக்குநர் மற்றும் இப்படத்தின் நடிகர் சமுத்திரகனி கூறும்போது, “சித்திரைச் செவ்வானம் ஒரு அழகான திரைப்படம். ஒரு அப்பா,  பொண்ணு இடையிலான உணர்வுப்பூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கை பயணம், அதில் நடக்கும் பிரச்சனைகள் தான் கதை. மனதை உருக்கும் ஒரு கதை. இது நம் சமூகத்திற்கு அவசியமான படம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும்” என்றார்.

பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநரும், “சித்திரைச் செவ்வானம்” திரைப்பட இயக்குநருமான ஸ்டண்ட் சில்வா இப்படம் குறித்து கூறும்போது,  “இயக்குநர் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக்கதையை இயக்கலாம் என்று தோன்றியது. நிறைய மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றி, பின் சமுத்திரகனியிடம் இந்தக் கதையை சொன்னேன். சொன்ன மறுநொடியே ‘தம்பி சூப்பரா இருக்கு எப்ப ஷீட்டிங் போகலாம்’ என்று கேட்டார். அப்படி உருவானது தான் ‘சித்திரைச் செவ்வானம்' திரைப்படம்.” என்று குறிப்பிட்டார்.

மேலும் தான் ஒரு ஃபைட் மாஸ்டர் என்பதால் இப்படம் ஆக்‌ஷன் படம் என்று நினைத்து விட வேண்டாம். இது நெஞ்சை தொடுவது போன்ற உணர்வு பூர்வமான படம். அப்பாவுக்கும் மகளுக்குமான அன்பான உறவு.  சமூகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல், அதை அவர்கள் கடப்பது தான் கதை.” என்று கூறினார்.

குறிப்பாக இப்படத்தின் நாயகியாக நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனை தேர்ந்தெடுத்ததை பற்றி அவர் கூறும்போது, “இந்தப்படத்தின் முக்கியமான மகள் பாத்திரத்திற்கு நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சரியாக இருப்பார் என இயக்குநர் விஜய் அவர்கள் கூறினார். எங்களுக்கும் அவர் பாத்திரத்தில் சரியாக பொருந்துவார் என தோன்றியது. மிக அற்புதமாக மகள் பாத்திரத்தை செய்து அசத்திவிட்டார். படத்தில் இன்னொரு முக்கியமான பாத்திரத்தை, கேரளாவில் புகழ்பெற்ற நடிகையான ரீமா கலிங்கல் செய்திருக்கிறார்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், பிஹைண்ட்வுட்ஸ்க்கு பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் அடங்கிய பிரத்தியேக பேட்டியை அளித்துள்ளார். குறிப்பாக அதில் தனக்கும் சாய் பல்லவிக்குமான வயது வித்தியாசங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதன்படி, “சாய் பல்லவியின் ட்வின் சிஸ்டரை பார்த்திருக்கிறீர்களா?” என்றெல்லாம் வலம் வரும் செய்திகள் குறித்து கேட்டபோது, “நானும் சாய் பல்லவியும் ட்வின்ஸ் எல்லாம் இல்லைங்க. என்னை விட 5 வருடம் பெரியவங்க அவங்க!” என பேசியுள்ளார்.

இதேபோல் தன் அக்கா சாய் பல்லவி போல் தான் டாக்டர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு நடிகை ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பூஜா கண்ணன் பேசும் முழுமையான் வீடியோவை இணைப்பில் காணலாம்.

போஸ்டர்ல சாய் பல்லவி மாதிரியே இருக்காங்களே?.. TWINS-ஆ?.. பூஜா கண்ணனின் தெறி பேட்டி! வீடியோ வீடியோ

மேலும் செய்திகள்

is Pooja Kannan Sai Pallavi twins Chithirai Sevvaanam

People looking for online information on Chithirai Sevvaanam, P Samuthirakani, Pooja Kannan, Sai Pallavi will find this news story useful.