www.garudabazaar.com

"ஆஹா..".. நெகிழும் ரசிகர்கள்!.. சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிய நடிகை செஞ்சது என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி அண்ணன், தம்பி மற்றும் குடும்ப பாசத்தை மையமாகக் கொண்ட சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Sai Gayathri replaced pandian stores Deepika heartfelt posts

இதில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தவர் தான் விஜே தீபிகா. இந்த சீரியலில் வரும் கண்ணனுக்கு மனைவியாக விஜே தீபிகா நடிக்கத் தொடங்கினார். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகும் காட்சிகளும் அரங்கேறின.

இந்த நிலையில் விஜே தீபிகா மாற்றப்பட்டு சாய் காயத்ரி, இந்த கேரக்டரில் நடிக்க தொடங்கியிருக்கிறார். முன்னதாக தன்னுடைய விலகலுக்கு பிறகு விஜே தீபிகா தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இதுவும் கடந்து போகும் கொஞ்சம் சில் பண்ணு தீபி... ஐஸ்வர்யா கேரக்டருக்கு சப்போர்ட் செய்த எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. ஐஸ்வர்யாவின் கேரக்டரில் இப்போ நான் இல்லாமல் இருக்கலாம்.  ஆனால் ஐஸ் கேரக்டரில் நடித்த தீபிகாவான நான் எப்பவும் இருப்பேன். என்னை மறந்து விடாதீர்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

தீபிகாவின் இந்த பதிவை பகிர்ந்த சாய் காயத்ரி, “என்னுடைய வாழ்த்துக்கள் தீபிகா .. நீங்கள் இன்னும் மென்மேலும் உயரத்திற்குச் செல்ல வேண்டும். டேக் கேர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை மீண்டு பகிர்ந்த தீபிகா, “வாவ்.. இதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு நடிகை ஒரு சீரியலில் இருந்து விலகிய பின், அந்த ரோலில் புதிதாக நடிக்கும் இன்னொரு நடிகை இப்படி வாழ்த்துவதும், அதை ஏற்று அந்த சீரியலின் முந்தைய நடிகை மகிழ்ச்சி தெரிவிப்பதும் என இந்த சக நடிகைகளின் பாசிடிவான பதிவுகள் நெகிழ வைத்திருப்பதாக பல ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "இந்த மூஞ்சை எப்படி TV-ல பாக்குறதுன்னு..".. பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா உருக்கமான பேட்டி!

தொடர்புடைய இணைப்புகள்

Sai Gayathri replaced pandian stores Deepika heartfelt posts

People looking for online information on Pandian stores, Saigayathri, Trending, VijayTelevision, VJDeepika will find this news story useful.