தமிழை தொடர்ந்து என்ட்ரி கொடுக்கும் ரஜினி பட நடிகை.. வாழ்த்துக் கூறும் ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்மனதோடு மழைக்காலம் என்ற படத்தின் மூலம் சினிமாத்துறையில் நடிகையாக அறிமுகமான சாய் தன்ஷிகா, திருடி, நிறம் போன்ற படங்கலில் நடித்து இருந்தார், பேராண்மை மற்றும் அரவான் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்த படங்களின் வெற்றி தான் சாய் தன்ஷிகாவிற்கு பல படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் முன்னணி இயக்குனரான பாலாவுடன் பரதேசி படத்தில் நடித்து தனது பெயரை நிலை நிறுத்திக்கொண்டார், அதுமட்டும் இல்லாமல் ரஜினியுடன் கபாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம் என்று பல மொழிப்படங்களில் தன்னை நிரூபிக்க போராடி வருகிறார் சாய் தன்ஷிகா. தற்போது தெலுங்கில் அறிமுகமாகும் இவர் 'ஷிகாரு' என்ற படத்தில் தேவிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஹரி குல்கனி இயக்குகிறார். பாப்ஜி காரு தயாரிக்கிறார். ஸ்ரீ சாய் லக்ஷ்மி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் 26 ம் தேதி படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சாய் தன்ஷிகாவிற்கு வெற்றி படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.