நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் உஷா ராணி (65) இன்று (21.06.2020) அதிகாலை 2.30 மணிக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

மலையாள - தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் கதாநாயகியாகவும் , குணச்சித்திர நடிகையாகவும் புகழ் பெற்றவர் உஷா ராணி.
திருமலை தென்குமரி, அரங்கேற்றம், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் உஷா ராணி. இவர் மறைந்த பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் என். சங்கரன் நாயரின் மனைவி.
உஷா ராணியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் பிரித்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்
உஷா ராணியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது . அவரது உடல் நாளை திங்கட்கிழமை போரூர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.