பிரபல டிவி தொகுப்பாளரை தவறாக சித்தரித்து ட்விட்டர் பதிவு - நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான அனுசுயா பரத்வாஜ், 'ஷனம்', 'ரங்கஸ்தலம்', 'கதனம்' உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். மேலும் இவர் டிவி தொகுப்பாளராகவும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

Rangasthalam fame Actress and TV Host Anusuya Baradwaj Complaints about Abusive post on Twitter

சமீபத்தில் அவர், தன்னை கேவலமாக சித்தரித்த ட்விட்டர் பதிவு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கம் ஒன்று அவரை தவறாக சித்தரித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதனை ஸ்கிரீன் ஷாட்டுடன் பகிரந்ந்த அவர், இதுகுறித்து ட்விட்டரில் புகார் அளித்ததாகவும் ஆனால் முறையான பதிலில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சைபர் கிரைம் போலீஸின் உதவியையும் நாடியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, இது குற்றம் இல்லை என்றால் வேறு என்ன என்றும் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Entertainment sub editor