வங்காள டிவி சீரியல் நடிகை சுபர்ணா ஜஷ் (Subarna Jash) கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.02.2020) இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்கொலை செய்து இறந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இவர் சமீப காலமாக கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என கூறப்படுகிறது.

’மயூர்பங்கி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள இவர் சினிமா வாய்ப்பு தேடி மேற்கு வங்கத்தில் இருந்து கொல்கத்தா சென்றுள்ளார். ஆனால், முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்கள் கிடைக்காததால் மீண்டும் தன் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
சுபர்ணா ஜஷ்ஷின் தற்கொலை அவர் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே போல சமீபத்தில் ஹிந்தி சீரியல் நடிகை செஜல் ஷர்மா மரணமடைந்தார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Tags : Subarna Jash