www.garudabazaar.com

Kantara : ப்ரைமில் ‘காந்தாரா’.. நீக்கப்பட்ட ‘வராஹ ரூபம்’ பாடல் .. நன்றி சொன்ன தாய்க்குடம் பிரிட்ஜ்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள ‘காந்தாரா’ படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கன்னடத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிட்டார்கள்.

Kantara Prime Video removed Varaha Roopam Thaikudam Bridge post

Also Read | இனியா நடிக்கும் ‘காஃபி’ த்ரில்லர் படம்.. நவ 27-ல் பிரபல டிவி சேனலில் நேரடி ரிலீஸ்..

நில அரசியலை மையப்படுத்திய அரசு மேலாண்மை, நிலச்சுவான்தார்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பார்வைகளை ஒரு புள்ளியில் இணைத்து எழுதப்பட்ட இப்படத்தை குறித்து இயக்குநர் ரிஷப் ஷெட்டி பேசும்போது, “காவல் தெய்வங்கள் தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன். ‘காந்தாரா’ படத்தில் இடம்பெற்றிருப்பது போல் நான் சிறிய வயதில் தெய்வ வேடமிட்டு வருபவர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் அனைவரையும் சமமாகவே கருதுவார்கள்.  இது தற்போது எம் மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை பற்றி விவரிப்பதை விட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன். இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக இந்த காவல் தெய்வங்கள் இருக்கிறது என்ற நம்பிக்கையை மையப்படுத்தி தான் இந்த படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.” என கூறியிருந்தார்.

Kantara Prime Video removed Varaha Roopam Thaikudam Bridge post

இந்நிலையில் இந்த படம் தற்போது பிரபல அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்தை பார்த்த பலரும் இந்த படத்தில் முன்னதாக இடம்பெற்ற ‘வராஹ ரூபம்’ பாடல் வெர்ஷன் இடம்பெறவில்லை என்றும், அதற்கு பதிலாக வேறு வெர்ஷன் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

Kantara Prime Video removed Varaha Roopam Thaikudam Bridge post

முன்னதாக கேரளாவின் தைக்குடம் பிரிட்ஜ் என்கிற மியூசிக் பேண்ட் குழுவினர், தாங்கள் வெளியிட்ட நவரசம் எனும் தனியிசைப் பாடல் தான் காந்தாரா படத்தில் ‘வராக ரூபம்’ பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது என  வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த ‘வராஹ ரூபம்’ பாடலை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் படக்குழுவிற்கு உத்தரவிட்டது. அதன்படி, தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள காந்தாரா படத்தில் பழைய வராஹ ரூபம் பாடல் இடம் பெறவில்லை.

Kantara Prime Video removed Varaha Roopam Thaikudam Bridge post

அத்துடன் இதுகுறித்து தைக்குடம் பிரிட்ஜ் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில், “எங்களது 'நவரசம்' பாடலின் பதிப்பை ‘காந்தாரா’ திரைப்படத்திலிருந்து அமேசான் பிரைம் நீக்கி வெளியிட்டுள்ளது. நீதி வென்றுள்ளது.. இந்த நேரத்தில் எங்களது வழக்கறிஞர் சதீஷ் மூர்த்தி மற்றும் எங்களின் வழிகாட்டியாக உள்ள மாத்ருபூமிக்கு எங்களது நன்றி. உரிமைகளுக்காகப் போராட எங்களுக்கு முழுமையான ஆதரவளித்த எங்கள் இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி!” என குறிப்பிடப் பட்டுள்ளது.

Also Read | Thalapathy67 : நாயகி திரிஷா? வில்லன் இவரா? விஜய் நடிக்கும் தளபதி 67 .. அடுத்தடுத்த தெறி அப்டேட்ஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

Kantara Prime Video removed Varaha Roopam Thaikudam Bridge post

People looking for online information on Kantaran, KantaraOnPrime, Rishab Shetty, Thaikudam Bridge will find this news story useful.