www.garudabazaar.com

“அப்ப உங்க டிரெஸ்ல இருந்து நா எடுக்கவா?”.. தாமரைக்காக பொசுக்குனு கேட்ட ராஜூ!.. கடுப்பான பாவனி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்னும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நிகழ்ச்சியைக் கொண்டு சென்று கொண்டு இருக்கிறது. இதில் சுருதி பாவனியின் உதவியுடன் பாத்ரூம் சென்று தாமரை குளித்துவிட்டு உடைமாற்றும் போது காயினை எடுத்த சம்பவம் பிக்பாஸ் வீட்டில் மிகப் பெரிய பூகம்பமாக வெடித்திருக்கிறது.

raju over pavani and suruthi thamarai dressing coin Abduction

“இப்படி டிரஸ் மாற்றும் ஒரு நிலையில் எப்படி நான் இது குறித்து, உன்னிடம் பேச முடியும் கேட்க முடியும்? அல்லது சத்தம் போட முடியும்?” என்று தாமரை அழுது புலம்பியதுடன், “இதெல்லாம் தப்பு பாப்பா.. இது நம்பிக்கை துரோகம்..” என்றெல்லாம் பேசி விட்டார்.

raju over pavani and suruthi thamarai dressing coin Abduction

உடனே, “இப்படி எல்லாம் பேசாதீர்கள்.. வார்த்தையை விடாதீங்க அக்கா” என்று பாவனி மற்றும் சுருதி இருவரும், தாமரையை எச்சரித்ததுடன்,  “இது வெறும் விளையாட்டு தான்.. தனி மனித தாக்குதல் வேண்டாம்.. உங்களை அசிங்கப்படுத்தி எடுக்க வேண்டும் என்று நாங்களும் நினைக்கவில்லை!” என்று ஒரு கேட்டனர்.

raju over pavani and suruthi thamarai dressing coin Abduction

ஆனால் உடனடியாக சிபி, ராஜூ, இமான் அண்ணாச்சி என பலரும் தாமாக வந்து நின்று பாவனி மற்றும் சுருதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது “ஆடையில் இருந்தால் கூட எடுக்கலாம் என்று சொல்கிறீர்களே.. அப்படி இருக்கும்போது இது என்ன தவறு” என்று பாவனி கேட்டார்.

raju over pavani and suruthi thamarai dressing coin Abduction

அதற்கு ராஜூ,  “அப்படியானால் உங்கள் டிரஸ்ஸிலிருந்து நான் எடுக்கவா?” என்று கேட்டதும் பாவனி அதிர்ந்து போய்,  “நான் இந்த விவகாரம் லேடீஸ்களிடையே சொன்னேன்” என்று கூற,  ஆனால் ராஜூவோ, “அதை எல்லாம் இந்த விஷயத்தில் பேசாதீர்கள்.” என்று மறுபடியும் கடுகடுத்துவிட்டு அங்கிருந்து நகரத் தொடங்கினார்.

raju over pavani and suruthi thamarai dressing coin Abduction

இதேபோல் சுருதியிடம் பேசிய ராஜூ, “உன் மேல தப்பு இல்லனு நீ நெனைச்சா கூட தாமரையிடம் போய் பேசு. நீ இதை செயதால் அவள் ரியாக்‌ஷன் இப்படி பெரிதாக இருக்கும் என்பது உனக்கு தெரியாதா?” என்று கேட்டதுடன்,  “தாமரையிடம் நீ நேரடியாக கேட்டிருந்தால் அவளே கொடுத்திருப்பாள்” என்று தெரிவித்தார்.

raju over pavani and suruthi thamarai dressing coin Abduction

சுருதியோ தனக்கு அப்படி ஆடுவதில் உடன்பாடு இல்லை என கூற, “இப்படிதான் ஆடணுமா?” என போகிற போக்கில் பேச, ஆனால் சுருதியோ அழுதுவிட்டார்.

raju over pavani and suruthi thamarai dressing coin Abduction

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Coin Task, Thamaraiselvi will find this news story useful.