இனிமே உழைச்சு சாப்புடுங்க, ராஸ்கல்...'' - அட்வைஸ் பண்ணி குரங்கை தெறித்து ஓடவிட்ட சூரி.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சூரி ஒரு குரங்குக்கு அட்வைஸ் செய்து ஓட விட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் சூரி. இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் தற்போது ரஜினியை வைத்து சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு குரங்குக்கு உணவு கொடுத்தபடி, 'ஏன் வேலைக்கு போக மாட்றீங்க, இனிமேலாவது உழைச்சு சாப்புடுங்க, எவன்கிட்டயாவது புடுங்கி தின்னுட்டு உடம்ப வளர்த்துகிட்டு இருக்க, ராஸ்கல்' என அவர் அட்வைஸ் செய்து திட்ட, அந்த குரங்கு தெறித்து ஓடுகிறது. இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அண்மையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் பஜ்ஜி போடும் வீடியோ வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.