Jai been others
www.garudabazaar.com

"நாங்கலாம் 70, 80 படம் பண்ணாப்றோம் தான்.. புனித் முதல் படத்துலயே".. ரஜினி மாஸ் பேச்சு.. த்ரோபேக் Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட சூப்பர் ஸ்டார், ராஜ்குமாரின்  மகனும், சிவா ராஜ்குமாரின் சகோதரருமான புனித் ராஜ்குமார் பெங்களூருவில் மரணம் அடைந்ததை அடுத்து அவருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி இறுதிச் சடங்கு நடந்தது.

Rajinikanth about Puneeth Rajkumar Mass Throwback Video

பல்வேறு ரசிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்டதுடன், அவருடைய நினைவுகளை பகிர்ந்தும், அவருக்கு அஞ்சலி செலுத்தியும் வந்தனர்.

இந்த நிலையில் திரைப்பட விழா ஒன்றில் புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் மற்றும் பலர் வீற்றிருக்கும் மேடையில் கன்னட மற்றும் ஆங்கிலத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், புனித் ராஜ்குமாரின் நடிப்பு குறித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகன் என்பதால் புனித் ராஜ்குமாருக்கு இத்தனை கைதட்டலும் பாராட்டும் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கப்பெறவில்லை. புனித் ராஜ்குமாரின் தனித்திறமையினாலேயே அவருக்கு இத்தகைய கைத்தட்டல்களும் பாராட்டும் கிடைக்கப் பெறுகிறது” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், “எங்களுக்கெல்லாம் 70, 80 படங்கள் பண்ணிய பிறகுதான் மெச்சூரிட்டி வந்தது. ஆனால் புனித் ராஜ்குமாரின் முதல் படத்திலேயே மெச்சூரிட்டியை காண முடிந்தது” என்று பாராட்டினார்.

மேலும் புனித் ராஜ்குமாரின் ஃபைட் காட்சிகள், போலீஸாக அவருடைய நடிப்பு மற்றும் நடிகராக நடிக்கும் போது அவருடைய இன்வால்வ்மென்ட் அனைத்தையும் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார். இந்த அரிதான பழைய த்ரோபேக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.‌

"நாங்கலாம் 70, 80 படம் பண்ணாப்றோம் தான்.. புனித் முதல் படத்துலயே".. ரஜினி மாஸ் பேச்சு.. த்ரோபேக் VIDEO! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth about Puneeth Rajkumar Mass Throwback Video

People looking for online information on Puneeth rajkumar, Rajinikanth, RIPPuneethRajkumar will find this news story useful.