"அந்த மனசுதான் சார் கடவுள்..".. இறந்த பின்னும் நெகிழவைத்த புனித் ராஜ்குமார்!
முகப்பு > சினிமா செய்திகள்கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது, அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்குபவர் புனித் ராஜ்குமார். கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவ ராஜ்குமாரின் தம்பியுமான இவருக்கு வயது 46.

நடிகர் ராஜ்குமார் குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது, கர்நாடக மாநில விருது, உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். கடைசியாக யுவரத்னா படத்தில் காணப்பட்ட புனீத் ராஜ்குமார், அண்மையில் ஜேம்ஸ் என்கிற ஆக்ஷன் படத்தில் நடித்து வந்தார்.
இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
முன்னதாக பஜரங்கி-2 பட விழாவில் கலந்து கொண்ட புனித் ராஜ்குமார் இந்த படத்தை பிரீமியர் ஷோவாக இன்று பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனிடையே மாரடைப்பு ஏற்பட்டு புனித் ராஜ்குமார், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி திடீர் மாரடைப்பால் இவர் உயிரிழந்துள்ளார்.
இவருடைய மறைவுக்கு பலதரப்பட்ட திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல்களை தெரிவித்தும், கண்ணீர் அஞ்சலி செலுத்தியும், மருத்துவமனை முன்பாக திரண்டு ஆற்றாமையை வெளிப்படுத்தியும் வருகின்றனர். இதனிடையே, முன்னதாக கொரோனா சமயத்தில் மக்களுக்காக நிதியுதவி அளித்திருந்த புனித் ராஜ்குமார், அவர் இறந்த பின் கண் தானம் செய்வதற்கு முன்பே ஒப்புதல் அளித்திருந்ததை அடுத்து, அவரின் கண்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதை கேட்ட பலரும், அந்த மனசுதான் கடவுள் என்று சொல்லி, புனித் ராஜ்குமாரின் செயலுக்காக தங்கள் நெகிழ்ச்சியை கண்ணீர் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.