www.garudabazaar.com

அட.. 'ராஜா ராணி 2' சீரியல் மயிலா இது?.. 'வேற லெவல் டான்ஸ்'.. இணையத்தில் தெறிக்கும் வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி ராஜா ராணி 2-ஆம் பாகம் சீரியல் ரசிகர்கள் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

rajarani2 serial maid character navya suji viral dance video

நடிகர் சித்து மற்றும் நடிகை ஆல்யா மானஸா இருவரும் இந்த சீரியலில் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். குடும்ப டிராமாவான இந்த சீரியலில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சனைகளும், நிகழ்வுகளும், வாழ்க்கையும் காட்டப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது இந்த சீரியலின் இரண்டாம் பாகம்.

தற்போது விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், நாயகன் சரவணன் சமையல் போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காக அர்ச்சனா செய்த சதித்திட்டங்களை எல்லாம் கடந்து, நாயகன் சரவணனை, நாயகி சந்தியா சமையல் போட்டிக்காக சென்னை அழைத்து வந்துள்ளார்.

இந்த தொடரில் இந்த வீட்டில் வேலை செய்யும் ‘மயில்’ என்று பெயர்கொண்ட பணிப்பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நவ்யா சுஜி.  இந்த சீரியலில் இவரது பட பட பேச்சு மற்றும் வழக்கத்துக்கு மாறான கதாபாத்திர வடிவமைப்பு, அதை அவர் வெளிக்கொண்டு வரும் விதம் அனைத்தும் ரசிகர்களிடையே பெருமளவில் கவர்ந்தது.

இப்படி சீரியலில் ஒருறம் வெகுளியான கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தாலும் நடிகை நவ்யா சுஜி, மறுபுறம் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் இவர், தனது சமூக வலைப்பக்கத்தில் மிகவும் மாடர்னாக டிரெஸ் அணிந்து வேற லெவலில் டிஸ்கோ ஸ்டெப்கள் போட்டு டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

rajarani2 serial maid character navya suji viral dance video

People looking for online information on ராஜா ராணி 2 சீரியல், ராஜா ராணி சீரியல், RajaRani2, Rajarani2 serial, Rajarani2 serial today, Rajarani2 serial today episode will find this news story useful.