www.garudabazaar.com

ரசிகர்களை கவரும் "RRR" படத்தின் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள்!! ட்ரெண்ட் ஆகும் மேக்கிங் Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வரும் அக்டோபர் 13ல்  வரவிருக்கும் படம் "RRR".

Rajamouli RRR movie making scenes released to impress the fans

இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

RRR movie making video Roar of RRR is released

சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது.

RRR movie making video Roar of RRR is released

இந்நிலையில் படத்தின் மேக்கிங் காட்சிகளை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. அதில் பிரம்மாண்ட செட்களில் சண்டைக்காட்சிகள் உருவான விதம் அதற்கு எடுத்துக்கொண்ட Pre Production பணிகள் உள்ளடங்கிய காட்சிகளின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன.

RRR movie making video Roar of RRR is released

இந்த மேக்கிங் முன்னோட்டத்துடன் ராப் பாடலும் வெளியாகி உள்ளது. இதனை கீரவாணி இசையில் ப்ளேசே பாடியுள்ளார். பாடல் வரிகளை ஆதித்ய ஐயங்காருடன் சேர்ந்து ப்ளேசே எழுதியுள்ளார்.

படத்தின் உருவாக்க காட்சியில் உள்ள செட்கள் அனைத்தும் காலனிய இந்தியாவை நினைவுபடுத்தும் வகையில் தயாரிப்பு வடிவமைப்பு சாபுசிரில் தலைமையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார்.

ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். வெளியான சில மணி நேரங்களிலே 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ளது Roar Of RRR.

ரசிகர்களை கவரும் "RRR" படத்தின் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள்!! ட்ரெண்ட் ஆகும் மேக்கிங் VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rajamouli RRR movie making scenes released to impress the fans

People looking for online information on Ajay devgan, Alia Bhatt, Jr ntr, Ram Charan, S S Rajamouli, Samuthirakani will find this news story useful.