Jail Others
IKK Others
MKS Others
www.garudabazaar.com

"உங்களால தான் உயிரோட இருக்கேன்".. காப்பாற்றியவர்களை ECR-ல் சந்தித்து அழுத யாஷிகா! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல மாதங்களுக்கு முன்பு ஈசிஆர் ரோட்டில் நண்பர்களுடன் செல்லும்போது கார் விபத்துக்குள்ளான நடிகை யாஷிகா ஆனந்த்.

Yashika Aannand visit her accident spot exclusive video

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழி மற்றும் நண்பர்களுடன் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அவருடைய தோழி பாவனி சம்பவ இடத்தில் இறந்தார். இதனை அடுத்து யாஷிகா ஆனந்த் பல மாதங்களாக மருத்துவ சிகிச்சைகளை பெற்று தற்போது மீண்டும் உடல் நலம் தேறி இருக்கிறார்.

Yashika Aannand visit her accident spot exclusive video

இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் பேட்டியாளர் ஆவுடையப்பனுடன் விபத்து நடந்த சம்பவ இடத்துக்கு சென்ற யாஷிகா ஆனந்த், அங்கு விபத்தின்போது தன்னைக் காப்பாற்றிய மக்களை சந்தித்து பேசினார். அவர்களுக்கு நன்றி கூறி யாஷிகா பேச, அவர்களும் எவ்வாறு விபத்து நடந்தது என்பது குறித்து யாஷிகா ஆனந்துக்கு விளக்கினர்.

Yashika Aannand visit her accident spot exclusive video

யாஷிகா ஆனந்த்தை காப்பாற்றிய பெரியவர் உட்பட அங்கு நின்றவர்கள், கடவுள் புண்ணியத்தில் யாஷிகா உயிர் பிழைத்து வந்ததாக கூற, அவர்கள் அனைவரையும் “எப்படி இருக்கிறீர்கள்?” என்று நலம் விசாரித்து பின்னர் நன்றி கூறினார். மேலும் அந்த சாலையை பார்க்கும்போதெல்லாம் யாஷிகாவின் நினைவு வரும் என்று விபத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாஷிகா ஆனந்திடம் கூறுகின்றனர்.

Yashika Aannand visit her accident spot exclusive video

யாஷிகா ஆனந்த்தின் கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து அவரை கார் இடுக்கில் இருந்து இழுத்து வெளியே எடுத்ததாக யாஷிகாவை காப்பாற்றியவர்கள் கூற, அந்த சமயம் தனக்கு கால் மரத்துப் போனதாக யாஷிகா ஆனந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

Yashika Aannand visit her accident spot exclusive video

குறிப்பாக அந்த மக்களிடம் பேசிய யாஷிகா ஆனந்த், “நான் உங்களால் தான் இன்று உயிரோடு இருக்கிறேன். என்னைக் காப்பாற்றியதற்கு மிக மிக நன்றி என். தோழியையும் காப்பாற்ற இருந்தீர்கள் என்றால் அது வேறு ஒன்றாக இருந்திருக்கும். உங்களை போல மனிதர்கள் இருக்கும் பொழுது இன்னும் மனிதம் வாழ்வது தெரிகிறது! எனக்கு இந்த இடமே பிடிக்கவில்லை!” என்று கூறி அழுதார்.

"உங்களால தான் உயிரோட இருக்கேன்".. காப்பாற்றியவர்களை ECR-ல் சந்தித்து அழுத யாஷிகா! வீடியோ வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Yashika Aannand visit her accident spot exclusive video

People looking for online information on BB5, BiggBoss5, Biggboss5tamil, Biggbosstamil, BiggBossTamil5, Vijay tv, Vijaytv, Yashika Aanand, Yashika Aannand, Yashika anand will find this news story useful.