www.garudabazaar.com
iTechUS

"நான் பண்ண பெரிய தப்பு நடிகன் ஆனது".. வைரலாகும் ரகுவரன் Throwback வீடியோ.. ட்ரெண்டிங்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா கண்ட சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவர் ரகுவரன். ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பயணத்தை தொடங்கிய ரகுவரன், பின்னர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அது அவரை அப்படியே ஒரு சிறந்த வில்லன் என்ற இடத்திற்கும் கொண்டு சேர்த்தது.

Raghuvaran throwback video about acting and life

Images Credit : Vijay Television

பாட்ஷா படத்தில் மார்க் ஆன்டனி, முதல்வன் படத்தில் அரங்கநாதன் என ரகுவரன் மிரட்டிய வில்லன் கதாபாத்திரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கு நடுவே நிறைய படங்களில், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ரகுவரன் நடித்திருந்தார்.

இதனிடையே, கடந்த 2008 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக ரகுவரன் தனது 49 ஆவது வயதில் உயிரிழந்தார். மிகச் சிறந்த நடிகராக திகழ்ந்த ரகுவரனின் மறைவு, சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரையும் அந்த சமயத்தில் மனம் நொறுங்க செய்திருந்தது. பலரின் பேவரைட் வில்லனாக தற்போது வரை ரகுவரன் திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், ரகுவரன் முன்பு பேட்டி கொடுத்த Throwback வீடியோ ஒன்று, தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Raghuvaran throwback video about acting and life

Images are subject to © copyright to their respective owners

காஃபி வித் அனு என்ற பிரபல ஷோ ஒன்று நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரகுவரன் மற்றும் நடிகை சுஹாசினி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு இடையே ரகுவரன் மற்றும் சுஹாசினி ஆகிய இருவரும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அதில் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு எது என்ற கேள்வியை சுஹாசினியிடம் அனு கேட்டிருந்தார். "பெரிய தப்பு அப்படின்னு எதுவும் இல்ல" என சுஹாசினி பதில் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய ரகுவரன், அந்த கேள்விய என்கிட்ட கேளுங்க என்றபடி, வாழ்க்கையில் செய்த பெரிய தப்பு என்பதற்கு பதிலளித்த அவர், "நடிகனானது. இதைவிட ஒரு நல்ல சந்தோஷம்னா ஒரு சின்ன நிலத்துல பயிரிட்டு, அந்த பயிரை எடுத்து மூட்டைல கட்டிட்டு சுமந்து போய் மார்க்கெட்ல போட்டு அதுல கிடைக்கிற சாப்பாட்டுல, கஞ்சியை குடித்து நிம்மதியா, 'ஆண்டவா மழை வரணுமே, வெயில் அடிக்குதே' அப்படின்னு பயிர்களை பார்த்துட்டு, கோழி, ஆடு, நாய்களை வச்சுட்டு, அவங்களுக்கெல்லாம் சாப்பாடு போட்டுட்டு நமக்கு ஒத்தாசையா ஏதாவது ஒரு ஆள் இருக்கணும் அவ்வளவுதான். அதான் லைஃப்ங்க" என கூறி இருந்தார்.

Raghuvaran throwback video about acting and life

Images are subject to © copyright to their respective owners

பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நடிகர் ரகுவரன் பேசியிருந்தது தொடர்பான Throwback வீடியோக்கள், தற்போது இணையத்தில் பலர் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

"நான் பண்ண பெரிய தப்பு நடிகன் ஆனது".. வைரலாகும் ரகுவரன் THROWBACK வீடியோ.. ட்ரெண்டிங்!! வீடியோ

Raghuvaran throwback video about acting and life

People looking for online information on Raghuvaran, Throwback Video will find this news story useful.