www.garudabazaar.com

“குஷி பட Audio Launch -ல அஜித் சொன்னது”.. மறக்கவே முடியாது.! விஜய் அம்மா ஷோபா Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார்.

Ajith Memories about vijay Mother Shoba Exclsusive

Also Read | “பிரிச்சு பார்த்ததே இல்ல.. அஜித் & விஜய் 2 பேருமே என் புள்ளைங்க தான் 😍”.. ஷோபா ஷேரிங்ஸ்!

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Ajith Memories about vijay Mother Shoba Exclsusive

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்துள்ளார்கள். இதேபோல, அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Ajith Memories about vijay Mother Shoba Exclsusive

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துணிவு படம் வெளியாகி வரவேற்பை பெற்றுகிறது.

அஜித் மற்றும் விஐய் என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் திரைப்படம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகி உள்ளதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர. இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய திரைப்படங்கள், கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகி இருந்தது.

Ajith Memories about vijay Mother Shoba Exclsusive

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த நடிகர் விஜய்யின் அம்மா, ஷோபா சந்திரசேகர், “குஷி ஆடியோ லாஞ்ச்க்கு அஜித் வந்துருந்தாரு.. அது எங்க நடந்ததுனு தெரியல. அப்போது அஜித் மைக்லயே Open ஆக சொல்லியிருந்தார். ராஜாவின் பார்வையிலே படத்தின்போது விஜய்க்கு சாப்பாடு செய்து அனுப்பும்போது அஜித்துக்கும் செய்து கொடுத்து அனுப்பியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். எனக்கும் அது சொல்ல முடியாத சந்தோஷம். அதையெல்லாம் ஏன்ப்பா சொல்ற என கேட்டேன். அவரோ, அது தனக்கு அதை மறக்கவே முடியாது.” என குறிப்பிட்டார்.

Also Read | Raavana Kottam : 'துணிவு' மற்றும் 'வாரிசு' திரைப்படங்களோடு 250 ஸ்கிரீன்களில் இராவண கோட்டம் டிரெய்லர்!!

“குஷி பட AUDIO LAUNCH -ல அஜித் சொன்னது”.. மறக்கவே முடியாது.! விஜய் அம்மா ஷோபா EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Memories about vijay Mother Shoba Exclsusive

People looking for online information on Ajith, Shoba Chandrashekhar, Thalapathy 67, Thunivu, Varisu, Vijay will find this news story useful.