''சரத்குமாரின் மகளாக இருந்தாலும் எனக்கும்...' - தைரியமாக சொன்ன வரலட்சுமி... ராதிகாவின் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, சிம்புவுடன் இணைந்து 'போடா போடி' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'தாரைதப்பட்டை', 'சர்கார்', 'மாரி 2' என வித்தியாசமான, அதே நேரம் போல்டான கதாப்பாத்திரங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

தற்போது அவரது நடிப்பில் கன்னி ராசி, வெல்வட் நகரம், சேஸிங், தெலுங்கில் கிராக் என அடுத்தடுத்து வெளிவரக் காத்திருக்கின்றன. இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், சரத்குமார் மகளாக இருந்தாலும் நடிப்பு வாய்ப்புக்காக என்னையும் தவறாக பேசியுள்ளனர். அந்த பிரச்சனையை நான் வெளியே கொண்டு வந்தேன். நான் வேணாம்னு சொல்ல கத்துக்கிட்டேன்.
அதற்கான ரெக்கார்டட் ஃபோன் கால்ஸ் என்னிடம் இருக்கு. ''ஹீரோ கூட, புரொடியூசர்ஸ் கூட இருக்கணும். அவங்க வர மாட்டேனு சொல்லுவாங்க''னு என்ன பத்தி பேசியிருக்காங்க. அதனால நிறைய பேரு என்ன ban பண்ணாங்க, நிறைய பேரு என்ன ஏத்துக்கல.
ஆனா, நான் இப்போ 25 படத்தை நிறைவு செய்துவிட்டேன். எல்லா படங்களிலும் நல்ல தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன். தற்போது 29வது படத்தில் கமிட் ஆகி இருக்கிறேன்'' என்றார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கருத்து கூறிய ராதிகா, ''சரியாக சொன்ன வரு, உனக்கு அதிக வலிமை கிடைக்கட்டும்'' என்று வாழ்த்தியுள்ளார்.