'ரூமுக்கு போவோம்....' சென்னையில் தவறாக நடக்க முயற்சி செய்த இயக்குனர்! - வித்யா பாலன்
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 27, 2019 04:47 PM
‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியிருக்கும் வித்யா பாலன், அஜித்திற்கு பொருத்தமான மனைவியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு ரசிகையாகியுள்ளார். மேலும் தொடர்ந்து நல்ல கதைகளாக இருந்தால் தமிழில் நடிப்பேன், என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்திருந்த வித்யாபாலன் " சென்னையில் ஒரு இயக்குனர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது, ”நான் சென்னையில் இருந்த போது என்னை சந்திக்க ஒரு இயக்குநர் வந்தார். நான் அவரிடம் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். ஆனால் அவர் 'நிறைய பேசணும்.. ரூமுக்கு போவோம்' என ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். பின்னர் ரூமுக்கு சென்று அவர் என்ன நினைக்கிறார் என்பதை சுதாரித்துக்கொண்டு ரூம் கதவை திறந்தே வைத்தேன். பின்னர் வெறும் ஐந்து நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்" என வித்யா பாலன் கூறியுள்ளார்.
'ரூமுக்கு போவோம்....' சென்னையில் தவறாக நடக்க முயற்சி செய்த இயக்குனர்! - வித்யா பாலன் வீடியோ