www.garudabazaar.com

"இம்சை யாரு?.. கொளுத்தி போடுறது இவரு தான்!!".. Open -ஆ சொன்ன குயின்சி.. .. Bigg Boss 6 Tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், 50 நாட்களைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

queency about bigg boss contestants inside house exclusive

Also Read | "ஒரு தப்பு கண்ணுக்கு தெரியுது".. சைலண்டா கணக்கு போட்ட விக்ரமன்.. ஒரே லைன்ல Thug life பண்ண ராம் 😂!

இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் தான்.

அதிலும் சில டாஸ்க்குகளில் வெற்றி பெறுவதற்காக போட்டியாளர்கள் ஆவேசமாகவும் செயல்படும் சமயத்தில் மாறி மாறி சிலருக்கு இடையே சண்டையும் வெடித்திருந்தது.

தற்போது சினிமா கதாபாத்திரங்களாக மாறி போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் ஆடி வருகின்றனர். இந்த டாஸ்க் சுற்று, சற்று கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு முன்பு நடந்த ஏலியன் மற்றும் பழங்குடி இன மக்கள் டாஸ்க்கில் நிறைய சண்டைகள் வெடித்திருந்தது. அணிக்குள் கூட சில குழப்பங்கள் ஏற்பட்டு சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.

queency about bigg boss contestants inside house exclusive

அடுத்தடுத்து பல்வேறு விவாதங்களும் நடந்து வரும் சூழலில், பார்வையாளர்களும் மிகுந்த ஆவலுடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இதனிடையே, கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சி வெளியேறி இருந்தார். இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை குயின்சி அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த பல விஷயங்கள் மற்றும் போட்டியாளர்கள் குறித்து குயின்சி பகிர்ந்து கொண்டுள்ளார்.

queency about bigg boss contestants inside house exclusive

ஜனனியுடன் நடந்த சண்டை குறித்தும், அசல் மாறும் நிவாஷினி ஆகியோர் குறித்தும், தனது தந்தை ஸ்தானத்தில் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்த ராபர்ட் மாஸ்டர் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவலை குயின்சி பகிர்ந்துள்ளார். அப்படி ஒரு சூழலில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் எப்படி என்பதை குறிப்பிடும் சில பெயர்களை நெறியாளர் சொல்ல, அதற்கு யார் பொருத்தமானவர் என்பதை குயின்சி சொல்கிறார்.

queency about bigg boss contestants inside house exclusive

பிக்பாஸ் வீட்டில் 'இம்சை' யார் என கேட்க, "என்னுடைய இம்சை ஷிவின் தான்" என்கிறார் குயின்சி. பாயும் புலி யார் என கேட்டதும், "விக்ரமன் குரல் கொடுப்பாரு" என குயின்சி சொல்கிறார். இதன் பின்னர், கொழுத்தி போடுறது யாரு என்ற கேள்விக்கு பதிலளித்த குயின்சி, "அமுதுவ சொல்லலாம்" என அமுதவாணனை குறிப்பிட்டு குயின்சி பதில் சொல்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து குயின்சி சொன்ன பதில்கள் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "கதிரும் நானும் Love பண்ணோமா?".. "எல்லாம் ஷிவினுக்காக தானா.?".. உடைக்கும் குயின்சி.. Exclusive

"இம்சை யாரு?.. கொளுத்தி போடுறது இவரு தான்!!".. OPEN -ஆ சொன்ன குயின்சி.. .. BIGG BOSS 6 TAMIL வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

queency about bigg boss contestants inside house exclusive

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Queency, Shivin, Vijay Television, Vijay tv will find this news story useful.