'கொரோனாவால ஒன்னும் பண்ண முடியல'' - வித்தியாசமாக பிரபல நடிகை வெளியிட்ட ஃபோட்டோஸ் செம வைரல் !
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா முடிந்த வரை வெளியில் வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அனைத்து விதமான படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது. இதன் ஒரு பகுதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பஞ்சாபி நடிகை சர்கன் மேத்தாவின் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வித்தியாசமான ரியாக்ஷன்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், கையில் கத்தியுடன் ஆப்பிளை வெட்டும் முனைப்பில் இருக்கும் புகைப்படம் என தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Tags : Coronavirus, Covid-19, Punjabi Actress, Sargun Mehta