www.garudabazaar.com

மிர்ச்சி சிவாவுடன் யோகிபாபு, சிவாங்கி நடிக்கும் படத்தில் புகழ்! .. தரமான சம்பவம் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிர்ச்சி சிவாவின் நடிப்பில் உருவாகும் காமெடி ரீமேக் திரைப்படம்  ‘காசேதான் கடவுளடா’.

Pugazh joins Kasethan Kadavulada mirchi shiva yogibabu sivaangi

1972-ல் ஏவிஎம் தயாரித்த ‘காசேதான் கடவுளடா’ படத்தில் எஸ்.பி.முத்துராமன், மனோரமா, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் தேங்காய் சீனிவாசன் போலி சாமியார் வேடத்தில் அட்ராசிட்டி காமெடிகளை செய்வார். சித்ராலயா கோபு இயக்கிய இந்த படம், அந்தக் காலத்தின் படு கிளாசிக் காமெடி திரைப்படமாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரீமேக்கில் தான் தற்போது மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன் நடிப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்குகிறார்.

இந்த படத்தில் ஏற்கனவே விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான சிவாங்கி இணைந்துள்ள நிலையில் தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழும் இணைந்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு குழுவினருடன் புகழ் சந்திக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ALSO READ: அட.. நம்ம மதன் கௌரி.. பிரபல YouTuber.. Elon Musk-டம் கேட்ட கேள்வி!!'.. "வந்துச்சு பாருங்க மாஸ் Reply".. தெறிக்கும் ட்விட்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Pugazh joins Kasethan Kadavulada mirchi shiva yogibabu sivaangi

People looking for online information on Mirchi Shiva, Pugazh, R Kannan, Sivaangi, Yogi Babu will find this news story useful.