COBRA D Logo Top
www.garudabazaar.com

Ravindar Mahalakshmi Wedding: பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர்.! Trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சில திரைப்படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகரன். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.

producer Ravindar serial actress vj mahalakshmi marriage

குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது.

இந்நிலையில்தான், தயாரிப்பாளர் ரவீந்தருக்கு பிரபல விஜே மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

2000த்துக்கு பின் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக பரிச்சயமானவர் விஜே மகாலட்சுமி. அதன்பிறகு, சின்னத்திரை நடிகையாக வலம் வந்த இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும்தான் திருப்பதி கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் தம்முடைய வலைப்பக்கத்தில், “மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க., ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா...குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!'” என பதிவிட்டு விஜே மகாலட்சுமிக்கு தாலி கட்டும் திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

producer Ravindar serial actress vj mahalakshmi marriage

People looking for online information on Libra Production, Ravindar Chandrasekaran will find this news story useful.