விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ நாளை ரிலீசாகுமா..? - தயாரிப்பு தரப்பு விளக்கம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 14, 2019 05:15 PM
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த சர்ச்சைக்கு தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட படங்களைஇயக்கிய இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர சூரி, நாசர் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக இரட்டை வேடங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சங்கத்தமிழன்’ திரைப்படத்திற்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை (நவ.15) ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படம் நாளை ரிலீசாகாது என செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின. இதைத் தொடர்ந்து இப்படம் நாளை வெளியாகும் என்றும், பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Don't belive in this rumour , its absolutely fake , #SangaTamizhan is coming with no trouble#SangatamizhanFromTomorrow pic.twitter.com/W2gKri3ZbY
— LIBRA Production (@LIBRAProduc) November 14, 2019