www.garudabazaar.com

"மன்னிச்சுடுங்க, தப்பு நடந்துருச்சு" மன்னிப்பு கேட்ட நடிகர் பிருத்விராஜ்.. காரணம் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பிருத்விராஜ், மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த பதிவு, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Prithviraj and shaji kailas apologize for dialogue in kaduva movie

Also Read | பிரபல நடிகர் வெளியிட்ட PONNIYIN SELVAN படத்தின் BTS போட்டோ.. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு!

நடிகர் பிருத்விராஜ் நடித்து, கடந்த ஜூலை 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்த திரைப்படம், "கடுவ". இந்த படத்தில், பிருத்விராஜுடன் விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ், கடுவ படத்தை இயக்கி இருந்தார். இவரது படங்கள் என்றாலே, ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்டவற்றுக்கு பஞ்சம் இருக்காது.

வசனத்தால் எழுந்த சர்ச்சை

அந்த வகையில், முழுக்க முழுக்க ஒரு ஜனரஞ்சக படமாக உருவாகி உள்ள கடுவ திரைப்படம், திரையிட்ட இடங்களில் சிறப்பாக வசூலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் வரும் வசனம் ஒன்று, கடும் சர்ச்சையையும் உருவாக்கி அதிகம் எதிர்ப்பினையும் சந்தித்து வருகிறது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை குறிப்பிட்டு வசனம் ஒன்று, கடுவ படத்தில் இடம் பெற்றுள்ளது.

Prithviraj and shaji kailas apologize for dialogue in kaduva movie

இந்த வசனம் தொடர்பாக, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இதனை நீக்கக் கோரி, கேரளா குழந்தைகள் ஆணையத்திற்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, படத்தின் இயக்குனர் ஷாஜி கைலாஷ், தனது படத்தில் வரும் வசனத்திற்கு மன்னிப்பு கேட்டு, சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றையும் வெளிப்படுத்தி உள்ளார்.

மன்னிப்பு கேட்ட ஷாஜி கைலாஷ், பிருத்விராஜ்

மேலும், இதனை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த நடிகர் பிருத்விராஜ், "மன்னிக்கவும். இந்த தவறு நடந்ததை ஒப்புக் கொண்டு, அதனை ஏற்றுக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஷாஜி கைலாஷ் பகிர்ந்த பதிவின் படி, கடுவ திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளின் பெற்றோரை வேதனைப்படும் வகையில், காட்சி இடம்பெற்றதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும், இதனை மனிதத் தவறாக எடுத்துக் கொண்டு மன்னிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Prithviraj and shaji kailas apologize for dialogue in kaduva movie

அதே போல, திரைக்கதையில் அந்த வசனம் வரும் போது, நானோ, திரைக்கதை ஆசிரியரோ அல்லது நடிகர் பிருத்விராஜோ யாரும் அதன் மறுபக்கம் பற்றி தெரியாமல் செய்து விட்டோம் என்பது தான் உண்மை என்றும்,  வில்லன் மற்றும் அவரது கொடூரத்தையும் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் நோக்கம் மட்டும் தான், அந்த வசனத்தின் பின்னால் இருந்தது என்றும் ஷாஜி கைலாஷ் தெரிவித்துள்ளார். இறுதியில், "என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் மனதிற்கு ஏற்பட்ட காயத்திற்கு இந்த வார்த்தை பரிகாரம் ஆகாது என்பதை புரிந்து கொண்டே, மறுபடியும் என்னை மன்னித்து விடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்" என்றும் ஷாஜி கைலாஷ் குறிப்பிட்டுள்ளார்.

Prithviraj and shaji kailas apologize for dialogue in kaduva movie

அதே போல, மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் சிலர் இந்த வசனம் காரணமாக மனம் வருந்தியது பற்றியும், தனது பதிவில் ஷாஜி கைலாஷ் தெரிவித்துள்ளார்.

Also Read | பிரபல பாலிவுட் நடிகையுடன் விக்கி - நயன்.. இணையத்தில் Trend ஆகும் ஃபோட்டோ!!

தொடர்புடைய இணைப்புகள்

Prithviraj and shaji kailas apologize for dialogue in kaduva movie

People looking for online information on Apologize, Kaduva movie, Prithviraj, Shaji kailas will find this news story useful.