www.garudabazaar.com

"என் ஹீரோ சும்மா வேற 'லெவல்'ங்க.." புகழ்ந்து தள்ளிய 'பிரேமம்' பட இயக்குனர்.. யார சொல்றாரு??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை குறித்து, இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ள கருத்து, அதிகம் வைரலாகி வருகிறது.

Alphonse puthren open about work experience with prithviraj

DON Movie Sivakarthikeyan | டான் ரிலீஸ் தேதி.. சிவகார்த்திகேயன் காலையிலேயே வெளியிட்ட சூப்பர் அப்டேட்

'நேரம்' மற்றும் 'பிரேமம்' ஆகிய மலையாள திரைப்படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இரண்டே திரைப்படங்கள் மட்டுமே இயக்கினாலும், இவரது இயக்கத்தில் வெளியான 'பிரேமம்', கேரளாவைத் தாண்டி, பல்வேறு மாநிலங்களில் ஹவுஸ்புல்லாக ஓடி சாதனை புரிந்தது.

நிவின் பவுலியின் கல்லூரி நாட்கள், மலர் டீச்சராக வாரும் சாய் பல்லவி, மற்ற கதாநாயகிகளின் கதாபாத்திரம் என படத்திலுள்ள பல விஷயங்கள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தள்ளிப் போன 'பாட்டு'

மலையாள சினிமா மற்ற மாநிலங்களில் அதிகம் கொண்டாடப்படுவும், பிரேமம் ஒரு முக்கிய புள்ளியாக அமைந்திருந்தது. பிரேமம் படத்தின் வெற்றிக்கு பிறகு, அல்போன்ஸ் புத்ரன் அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள்  மத்தியில் பரவலாக இருந்தது. தமிழில் ஒரு சினிமா இயங்குவதாகவும் ஆரம்பத்தில் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பஹத் பாசிலை வைத்து, 'பாட்டு' என்ற படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கப் போவதாகவும் போஸ்டர்கள் வெளியானது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, அந்த படமும் தள்ளிப் போனது.

பிரித்விராஜ் - நயன்தாரா

தொடர்ந்து, பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து 'கோல்ட்' என்ற படத்தை அல்போன்ஸ் புத்ரன் தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தை ஆக்ஷன் த்ரில்லர் வகையில் அல்போன்ஸ் புத்ரன் உருவாக்கி வரும் நிலையில், இதன் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. பிரித்விராஜ் தான் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.

Alphonse puthren open about work experience with prithviraj

இயக்கிய அனுபவம்

நேரம் மற்றும் பிரேமம் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் தான், 'கோல்ட்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ரசிகர் ஒருவர், 'பிரித்விராஜை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?' என அல்போன்ஸ் புத்ரனிடம் பேஸ்புக்கில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அல்போன்ஸ், 'பிரித்விராஜை வைத்து இயக்கியதால், நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவர் தனது தொழிலில் மிகவும் ப்ரொபெஷ்னலாக இருப்பவர்.

Alphonse puthren open about work experience with prithviraj

நிறைய விஷயங்கள்

ஸ்க்ரிப்ட்டை படித்து விட்டு, ஆக்ஷன் சொல்வதற்கு முன்னரே நடிப்பதற்காக பிரித்விராஜ் தயாராகி விடுவார். ஒரு நடிகராக நீங்கள் என்னை அதிகம் இன்ஸ்பியர் செய்துள்ளீர்கள் என அவரிடம் கூறினேன். அவர் தன்னுடைய திறமைகளை நாளுக்கு நாள், கூர்மைப்படுத்திக் கொண்டே இருந்ததால் தான், இன்று இந்த நிலைக்கு அவரால் வர முடிந்தது. அவரிடம் அதிகம் விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு அனுபவமாக எனக்கு அமைந்தது' என குறிப்பிட்டுள்ளார்.

Alphonse puthren open about work experience with prithviraj

பிரேமம் எனும் மிகப் பெரிய வெற்றி படத்திற்கு பிறகு, 'கோல்ட்' திரைப்படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கி வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

OFFICIAL: நயன்தாரா மலையாளத்தில் நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரேமம் பட பிரபலம்! அடிப்பொலி

Alphonse puthren open about work experience with prithviraj

People looking for online information on Alphonse Puthren, இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், நேரம், பிரேமம், Work experience with prithviraj will find this news story useful.