Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

Vishal : நடிகர் விஷால் வீட்டின் மீது கல்வீச்சு.. காவல் நிலையத்தில் மேலாளர் பரபரப்பு புகார்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை அண்ணா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நடிகர் விஷாலின் வீட்டில்  இரவு நேரத்தில் சிகப்பு நிற காரில் வந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vishal house attacked by unidentified persons

Also Read | அந்த படத்துலயே ஆசப்பட்டேன்.. ஆனா சந்தானம் வந்ததும் ரூட்டே மாறிடுச்சு.. உடைத்த சுந்தர் C

இதனைத் தொடர்ந்து, விஷாலின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக நடிகர் விஷாலின் மேலாளர் தற்போது விஷாலின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன், அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரில், 26-09-2022 அன்று இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கியதாகவும், அதற்கு ஆதாரமாக எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும், புகார் கடிதத்துடன்  இணைத்து கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் காவல் துறையினர் அந்த புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு விஷால் இல்லத்தை தாக்கிய அடையாளம் தெரியாத அந்த நபர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Vishal house attacked by unidentified persons

தற்போது சில படங்களில் கமிட் ஆகி, பிஸியாக நடித்து வரும் விஷால் இந்த சம்பவத்தின்போது படப்பிடிப்புக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.  நடிகர் விஷால் நடிப்பில் லத்தி படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இதேபோல் விஷால் நடிப்பிலான மார்க் ஆண்டனி திரைப்படம் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே துப்பறிவாளன் - 2 படப்பிடிப்பு விரைவில் லண்டனில் துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Saniya Iyappan : கூட்ட நெரிசலில் தப்பா நடந்த நபர்.. ஓங்கி பளார் விட்ட இளம் நடிகை.! பரவும் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vishal house attacked by unidentified persons

People looking for online information on Actor Vishal, Vishal will find this news story useful.