www.garudabazaar.com

பாகுபலி பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் இவங்களா? படம் எப்போ ரிலீஸ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது.

prabhas next film with this heroine to hit cinemas

அதனால் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அறிவுரைப்படி காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடிக்கிறார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2022 பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

prabhas next film with this heroine to hit cinemas

இதனைத்தொடர்ந்து பிரபாஸ், கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஸ்ருதிஹாசனுடன் சலார் படத்தில் நடிக்க உள்ளார்.  இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. ராமயணத்தை மையமாக வைத்து உருவாகும் ஆடிபுருஷ் படத்தில் ஓம் ராவத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

prabhas next film with this heroine to hit cinemas

இந்த படத்தில் சயிப் அலி கான் முக்கிய வேடத்தில் பிரபாசுடன் இணைந்து நடிக்கிறார். நடிகை "பரம சுந்தரி" புகழ் கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழில் வெளியாக உள்ளது.

prabhas next film with this heroine to hit cinemas

அடுத்த வருடம் (11.08.2022) அன்று இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

மேலும் செய்திகள்

prabhas next film with this heroine to hit cinemas

People looking for online information on Kriti Sanon, Prabhas will find this news story useful.