www.garudabazaar.com

தெலுங்கு சினிமாவில் மோதலுக்கு தயாராகும் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு & 'பாகுபலி' பிரபாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் மகேஷ்பாபுவும், பிரபாசும். இவர்கள் இருவரும் நடிக்கும் படங்கள் தெலுங்கு சினிமா வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

mahesh babu and prabhas ready to clash for festival

இந்நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் `சர்காரு வாரி பாட்டா' படத்தை 'கீதா கோவிந்தம்' படத்தை இயக்கிய இயக்குனர் பரசுராம் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

mahesh babu and prabhas ready to clash for festival

'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை அடுத்தாண்டு (2022) மஹாசங்கராந்திக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனை நேற்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதில் "சர்காரு வாரி பாட்டா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 31-ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடிப்பில் உருவாகி வரும் 'ராதே ஷியாம்' படத்தின் புதிய வெளியீட்டு தேதியை யு.வி. கிரியேஷன்ஸ், படத்தயாரிப்பு நிறுவனம் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. அதன் படி, 'ராதே ஷியாம்' ஜனவரி 14, 2022 அன்று திரையரங்குகளில், மஹாசங்கராந்தி நாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

mahesh babu and prabhas ready to clash for festival

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டேயின் 'ராதே ஷ்யாம்' உலகம் முழுவதும் ஜீலை 30, 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை காரணமாக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆகையால் தெலுங்கு சினிமாவின் இரண்டு முன்னணி ஹீரோக்கள் படங்கள் அடுத்த வருடம் மஹா சங்கராந்தியை முன்னிட்டு மோத உள்ள விடயம் அனைவரின் கவனத்தையும் தெலுங்கு சினிமா பக்கம் குவித்துள்ளது.

 

mahesh babu and prabhas ready to clash for festival

People looking for online information on Mahesh Babu, Prabhas will find this news story useful.