www.garudabazaar.com

அருவி, வாழ் படத்திற்கு பிறகு இயக்குனர் அருண் பிரபு இயக்கும் புதிய படத்தின் செமயான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் அருண் பிரபு, கே. எஸ் ரவிக்குமார் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.

Breaking: Aruvi Director & Producer again join for a new project

2016ல் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர்கள் அதிதி பாலன் நடிப்பில் வெளியான படம் 'அருவி'. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களும் இந்த படத்தை கொண்டாடினர்.

Breaking: Aruvi Director & Producer again join for a new project

அருவி படத்தை தொடர்ந்து கடந்த ஜுலையில் இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் இரண்டாவது படமாக 'வாழ்' படம் சோனி லிவ் ஓடிடியில் நேரடி பிரீமியராக வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்தார். 

Breaking: Aruvi Director & Producer again join for a new project

அருவி, வாழ் படங்களை தொடர்ந்து இயக்குனர் அருண் பிரபு இயக்கும் புதிய படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இவர்கள் ஏற்கனவே அருவி படத்தை தயாரித்து இருந்தனர். இயக்குனர் அருண் பிரபுவை அறிமுகபடுத்தியதும் இந்த நிறுவனம் தான். 

Breaking: Aruvi Director & Producer again join for a new project

இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக உள்ளன.

மேலும் செய்திகள்

Breaking: Aruvi Director & Producer again join for a new project

People looking for online information on Arun Prabhu will find this news story useful.