Reliable Software
www.garudabazaar.com

பிரபல விஜய் டிவிதம்பதி வீட்டில் சீக்கிரமே குவா குவா சத்தம்... மகிழ்ச்சியான செய்தி வெளியானது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபலமான தொலைக்காட்சி ஜோடிகளில் ஒருவரான சமீரா ஷெரிஃப் மற்றும் சையத் அன்வர் விரைவில் பெற்றோராக உள்ளனர். சமீராவும், ஷையதும் தங்கள் இன்ஸ்டாகிராமில் "நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை" என்ற தலைப்பில் ஒரு வீடியோவுடன் இதை அறிவித்துள்ளனர்.

popular vijay tv real pair promoted as parents விஜய் டிவி தம்பதி வீட்டில் குவா குவா

சமீரா ஷெரிஃப் மற்றும் ஷையது அன்வர் ரசிகர்கள் இந்த ஜோடிக்காக மகிழ்ச்சியடைந்துள்ளனர். சமீரா ஷெரிஃப் மற்றும் அவரது கணவர் அன்வர் ஆகியோர் முறையே சக்தி மற்றும் பிரபாகரன் என்ற வேடங்களில் பகல் நிலவு என்ற விஜய் டிவி சீரியலில் சேர்ந்து நடித்துள்ளனர். பின்பு  தங்கள் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல விருப்பிய அவர்கள் நவம்பர், 2019 இல் திருமணம் செய்து கொண்டனர்.

popular vijay tv real pair promoted as parents விஜய் டிவி தம்பதி வீட்டில் குவா குவா

தமிழில், சமீரா ஷெரிஃப் ரெக்கை கட்டி பரக்குது மனசு (மலர்) என்ற சீரியலில் நடித்தார். அதேபோல் அன்வர் சரவணன் மீனாக்ஷி (ஜீவா), பிரிவோம் சந்திப்போம் (பிரபு), தாயுமானவன் (அசோக்) மற்றும் ரெக்கை கட்டி பரக்குது மனசு (அருணாச்சலம்) போன்ற சீரியல்களில் தோன்றியதற்காக அறியப்படுகிறார். அதேபோல் அன்வர் பல பிரபல சீரியல்களை தயாரித்த தயாரிப்பாளரும் கூட. இந்நிலையில் ரசிகர்கள் இந்த தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Sameera

தொடர்புடைய செய்திகள்

popular vijay tv real pair promoted as parents விஜய் டிவி தம்பதி வீட்டில் குவா குவா

People looking for online information on Sameera will find this news story useful.